மதுபோதையில் டாஸ்மாக் மேலாளர் ஆய்வு..
விருத்தாசலம்
மதுபோதையில் டாஸ்மாக் மேலாளர் ஆய்வு... அங்கு சுண்டல் விற்ற முதியவரை வாட்டர் பாட்டில் கொண்டு தாக்கியதால், மனமுடைந்த முதியவர் பூச்சு மருந்து அருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் டாஸ்மாக் கடலூர் மாவட்ட மேலாளர் ரவிக்குமார் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்ய வந்த போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சண்முகம் என்பவர் வயிற்றுப் பிழைப்பிற்காக சுண்டல், வாட்டர் பாட்டில் விற்பனை செய்து வந்தார்.
இதனை பார்த்த டாஸ்மாக் மேலாளர் ரவிக்குமார் முதியவரை வாட்டர் பாட்டிலை கொண்டு தாக்கியுள்ளார்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான சண்முகம் என்பவர் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதியவர் சண்முகத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


No comments
Thank you for your comments