Breaking News

அதிமுக வேட்பாளர்களுக்காக முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவருக்கு  போட்டியிடும் கழக வேட்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாலாஜாபாத் அடுத்த கருக்குபேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

உடன் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கோகுல இந்திரா, சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோம சுந்தரம், கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உள்ளனர்.

No comments

Thank you for your comments