சிறுவன் மீது மீன் வண்டி மோதி விபத்து... சிறுவன் படுகாயம்...
கடலூர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வைரவேல் மகன் வெற்றிவேல் (வயது-13) இவர் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் கண்டப்பங்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் நோக்கி, மீன் ஏற்றிச் சென்ற மினி பிக்கப் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிறுவன் வெற்றிவேல் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து ஏற்படுத்திய மினி சரக்கு லாரியை, தகவல் அறிந்த ஆட்டோ ஓட்டுனர்கள், வேப்பூர் கூட்டுரோடு அருகில் நிறுத்த முயற்சித்த போது நிறுத்தாமல் ஓட்டுநர் அதிவேகமாக தப்பி சென்று வேப்பூர் தீயணைப்பு நிலையம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் கிளினர் தப்பி சென்றனர்.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநர் கிளீனரை தேடி வருகின்றனர்.

No comments
Thank you for your comments