Breaking News

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் இளஞ்ஜோடி

விருத்தாசலம்

விருத்தாசலம் காவல் நிலையத்தில் திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் இளஞ்ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருசாளகுப்பம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அருண்குமார் என்பவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம்  கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் முகில்வலி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். 

👉 இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆

இந்நிலையில் முகில்வலியின் காதல் அவரது  பெற்றோருக்கு தெரிந்ததால் காதல் திருமணத்திற்கும்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அருண்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம்  செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு விருத்தாசலம் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் திருமண கோலத்தில் தஞ்சம் புகுந்தனர்.


இதுகுறித்து விருத்தாசலம்  காவல் ஆய்வாளர் விஜயரங்கன், உதவி ஆய்வாளர் ஆதி ஆகியோர்  இருவரையும் விசாரணை செய்தபோது  பெண்னின் தாய், தந்தை திருமணத்திற்கு  தடையாக இருப்பதால்  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி  கோவிலில் திருமணம் செய்துகொண்டோம், ஆகையால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மனு கொடுக்க வந்தோம் என்று வாக்குமூலம் கொடுத்துனர். இதனால் அந்தப் பகுதியில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments