திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ.,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக,உள்ளிட்ட கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
👉இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட திமுக மற்றும் வி.சி.க வேட்பாளர்களை ஆதரித்து அய்யம்பேட்டை, கருக்குப்பேட்டை, ஏகனாம்பேட்டை, முத்தியால்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் இரு சக்கர வாகனங்கள் படைச்சூல வீதி வீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கிராம மக்களிடம் தேர்தல் பிரச்சார துண்டு பிரச்சுரங்களை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கினர்.
அப்போது முத்தியால்பேட்டை பகுதியில் வாக்குகள் சேகரித்தபோது பேசிய மாவட்ட செயலாளர் சுந்தர் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை என்றும் பட்டா இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டை எழுப்பினார்.
சென்றயிடமெல்லாம் கிராம மக்கள் பாட்டாசுகளை வெடித்து திமுக வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.


No comments
Thank you for your comments