Breaking News

கொளஞ்சியப்பர் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்...

 விருத்தாசலம்  

விருத்தாசலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் உண்டியல் ஐந்து லட்சத்து 65 ஆயிரம் பணம் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் ஐந்து லட்சத்து 65 ஆயிரத்து 672 ரூபாய் பணமும்,950 கிராம் வெள்ளியும், ஏழரை பவுன் நகையும், பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

மேலும் காணிக்கை எண்ணும் பணியில் இந்து அறநிலையத் துறையின் உதவி ஆய்வாளர் பரணிதரன் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியில் கொளஞ்சியப்பர் திருக்கோவில் செயல் அலுவலர் மாலா,விருத்தாசலம் ஆய்வாளர் கோவிந்தசாமி, மற்றும் திருக்கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments