Breaking News

குடிமகன்கள் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:

ஒயின் ஷாப் மாத்தாதீங்க என கையில் பாட்டிலுடன் குடிமகன்கள் காஞ்சிபுரத்தில் அரசு மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெரிய காஞ்சிபுரம் வெள்ளை குளம் பகுதியில் அமைந்துள்ளது அரசு மதுபான கடை. இக்கடை குடியிருப்பு பகுதியின் நடுவே இருப்பதாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் இடமாற்றம் செய்ய உத்திரவிட கோரி கூறி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கடந்த ஒரு மாதம் முன்பு மனு அளிக்கப்பட்டது. 

இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மண்டல மேலாளர் பதிலளிக்கையில் இந்த அரசு மதுபானக்கடை குடியிருப்புக்கு மத்தியில் இல்லை என உண்மைக்கு புறம்பாக தகவல் தெரிவித்ததால் அது குறித்தும் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற மண்டல மேலாளர் அறிவுறுத்தினார். 

இந்நிலையில் இக்கடை இடம் மாறும் நிலை உருவானதால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடிமகன்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பு பீர் பாட்டிலுடன் கடையை மாத்தாதீங்க என கோரிக்கை முழக்கம் எழுப்பி கடை நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 

சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடிமகன்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.


பொதுவாகவே அரசு மதுபானக் கடையை அகற்ற பொதுமக்கள் போராடி வரும் நிலையில் கடையை மாற்ற வேண்டாம் என குடிமகன்கள் கோரிக்கை வைத்தது  ஆச்சரியமளித்தது...

No comments

Thank you for your comments