Breaking News

பள்ளிக்கூடம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து... முன்பே எச்சரித்த காலச்சக்கரம் நாளிதழ்...

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த சோரஞ்சேரி பஞ்சாயத்தில் அணை கட்டுச்சேரி கிராமத்தில் அரசு பள்ளி  இயங்கி வருகின்றது.  இந்த பள்ளியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.


இந்நிலையில், விதிகளுக்கு மாறாக இதன் அருகாமையில்  பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெட்ரோல் பங்க்கில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் 500 பிள்ளைகளும் உயிர்பலி ஏற்படும் அபாயம் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டு இந்த பெட்ரோல் பங்க் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமன்றி, இந்த பெட்ரோல் பங்க் வருவதற்காக அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல லட்சங்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கி உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். 

அவர்களின் குற்றச்சாட்டிற்கு ஏற்ப, அந்த பெட்ரோல் பங்க் அங்கே நிறுவப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்றது.

இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்திற்கு ஏற்றார்போல், நேற்று 14.9.2021 அன்று) இரவு திடீரென்று அந்த பெட்ரோல் பங்கில் மின் கசிவு ஏற்பட்டதால் மின் பெட்டி வெடித்து சிதறியது.

நல்லவேளையாக அங்கு பொதுமக்களும் இல்லை... பள்ளிக்கூடமும் நடத்தப்படவில்லை...  பகல் நேரத்தில் பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருக்கும் போது மின் கசிவு ஏற்பட்டிருந்தால் விபரீதம் மிக மோசமாக இருந்திருக்கும் என்பதில்  எள்ளவும் சந்தேகம் இல்லை...

பள்ளி அருகாமையில் பெட்ரோல் பங்க் அமைக்க கூடாது என்பதற்காக, காலச்சக்கரம் நாளிதழில் சமூக நலனை சார்ந்து வருமுன் காப்போம் என்று முன்னெச்சரிக்கையாக 20-11-2020ம் தேதி அன்று  செய்தி ஒன்று வெளியிட்டிருந்தோம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் தாசில்தார் ஊராட்சி மன்ற தலைவர் இவர்களிடம் முறையிட்டோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இதுநாள்வரை எடுக்கப்படவில்லை  என்பது வேதனையாக உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.... 


பேராபத்து நடக்காமல் இருக்க உடனடியாக, இந்த பெட்ரோல் பங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வலுக்கின்றது. 

பள்ளி குழந்தைகளை மனதில் கொண்டு   நிர்வாகம் உடனடியாக இதனை மாற்ற உத்தரவிட வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்...

வழக்கம் போல் அசம்பாவிதம் நடந்த பின்பு நடவடிக்கை எடுக்காமல், தற்போது நடந்த தீ விபத்தை கருத்தில் கொண்டு, பேராபத்து  நடைபெறுவதற்கு முன்,  முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தற்போது  போர் கொடி தூக்கி உள்ளனர்... 

துறையா...? துரிதமா...?  செயல்படுகின்றதா மாவட்ட நிர்வாகம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

20-11-2020ம் தேதி அன்று வெளியிட்ட செய்தி ...




No comments

Thank you for your comments