குற்றம் தடுப்பது குறித்து ஒத்துழைக்க ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பட்டறை நடத்துனர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பட்டறை நடத்துனர்களுக்கு காட்பாடி காவல் நிலையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி ஆய்வாளர், காட்பாடி ஆய்வாளர் ஆனந்தன், காட்பாடி உதவி ஆய்வாளர் கார்த்திக், பரமசிவம், பழனி, விருதம்பட்டு உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை..
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை செய்ய வருபவரிடம் ஆதார் மற்றும் செல்போன் நம்பர் வாங்க வேண்டும்.
அதேபோல் ஆட்டோவில் வேற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் அல்லது சந்தேகத்திற்கு உள்ள நபர் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை கண்டதும் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்
உங்களுடைய ஒத்துழைப்பும் காவல்துறையின் ஒத்துழைப்பும் இருந்தால் அனைத்துக் குற்றங்களை தடுக்கப்படும். இவ்வாறு ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தெரிவித்தார்.
அதேபோல் கூட்டத்தில் பற்கேற்ற ஆட்டோ ஓட்டுனர்களும் பட்டரை நடத்துனர்களும், சந்தேகத்திற்குரிய ஆட்கள் வந்தால் உங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்
இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments