போச்சம்பள்ளி புதிய வட்டாட்சியராக எம்.இளங்கோ பொறுப்பு ஏற்பு
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி புதிய வட்டாட்சியராக எம்.இளங்கோ பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி மாவட்டம் முழுவதும் 11 வட்டாட்சியர்களை அண்மையில் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் போச்சம்பள்ளி வட்டாட்சியராக பணிசெய்து வந்த முருகேசன் அஞ்செட்டிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியராக பணியாற்றிவந்த எம்.இளங்கோ போச்சம்பள்ளிக்கு மாற்றப்பட்டு இன்று போச்சம்பள்ளியின் 46 வது வட்டாட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் அனிதா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சந்தோஷ், மண்டல துணை வட்டாட்சியர் அண்ணாதுரை, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் திருநாவுகரசு, வட்ட வழங்கல் அலுவலர் மோகன், தலைமை நில அளவையர் சிங்காரவேல், உள் வட்ட நில அளவையர்கள் பன்பரசன், அம்சராஜ், வெங்கடாசலம், பிரபு, செல்வம், தேர்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் ஜெய்கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் ராகேஷ், லெனின், சரவணன், தேவராஜ், அருண், கௌரிசங்கர், சென்னகிருஷ்ணன், தேன்மொழி மற்றும் அலுவலக ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments