Breaking News

நீதிமன்றம் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பாஜக மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நாடு தழுவிய முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்றம் புறக்கணித்து வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இந்திய ஒன்றிய அரசாணை பாஜக மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை திணித்து வருகின்றது. 


 

3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாட்டின் பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த கோரியும்,  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,  தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், வலியுறுத்தி கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில்  200-க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

No comments

Thank you for your comments