காபூல் நகர விமான நிலையத்தை திறந்து இயக்க கத்தார் நிபுணர் குழு தீவிர முயற்சி...
காபூல், செப். 3-
ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் மூடிக்கிடக்கும் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளில் கத்தார் நாட்டு நிபுணர் குழு இறங்கியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் உள்ள கருவிகள் எல்லாம் இயங்காமல் உள்ளன. அவை வேண்டுமென்று பழுது செய்யப்பட்டுள்ளன அவற்றை சீர் செய்வதற்கு இன்னும் ஒரு வாரகாலம் ஆகக்கூடும் என்று கத்தார் நாட்டு நிபுணர் குழு குறிப்பிட்டது.
கடுமையான வறட்சி மற்றும் பசி பஞ்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு உதவி செய்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோரியுள்ளனர் அந்த சேவை அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் குறிப்பிட்ட நகரங்களில் இறக்கும் வரை இறங்குவதற்காக ஐநா சபை சார்பில் விமான சேவை நடத்தப்பட உள்ளது ஐநா சபையின் விமானசேவை வெள்ளிக்கிழமை அன்று துவங்கியது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு திட்ட அதிகாரிகள் ஆப்கானிஸ்தானத்தில் மஜார்மற்றும் காந்தகார் விமான நிலையங்களில் தங்கள் விமானங்கள் மூலமாக உணவுப் பொருட்களை கொண்டு வந்து இறக்கி பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் பணத்தை வழங்குகிற சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள வெஸ்டர்ன் யூனியன் என்ற பன்னாட்டு சேவை நிறுவனம் தனது சேவையை ஆப்கானிஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை எழுந்து துவக்கியுள்ளது.
அமெரிக்க அரசு தனது சேவையை ஆப்கானிஸ்தானத்தில் துவக்கும் படி வலியுறுத்தியது. அதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தனது சேவையை வெஸ்டர்ன் யூனியன் துவக்கி உள்ளது என்று ட்வீட்டரில் அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானத்தில் மத்திய வங்கி சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் ஈர்த்து வைத்துள்ளது அதுதவிர ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி அமெரிக்காவில் தங்கமாகவும் வெளிநாட்டு நாணய இருப்பாகவும் வெளிநாட்டு நாணய ரொக்கமாகவும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை போட்டு வைத்துள்ளது. அந்த பணத்தை ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்காது என்று வியா அமெரிக்க அதிபர் ஜோ பிடேன் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments
Thank you for your comments