அரசு பொது மருத்துவமனையில் மரக்கன்றுகள் வழங்கல்
திருவள்ளூர்:
சர்வதேச உரிமைகள் கழகம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக திருநின்றவூர் அரசு பொது மருத்துவமனைக்கு சுமார் 370 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நிறுவனர் தலைவர் Dr. S.சுரேஷ் கண்ணன் ஆணைக்கிணங்க கழகத் தலைவர் T.K.அசோக்குமார் வழக்கறிஞர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச ஒருங்கிணைப்பாளர் K.முரளி அவர்கள் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் M. மரிய ஜோசப் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு பொது மருத்துவர் S.கீதா அவர்களும் அரசு சித்த மருத்துவர் S. கஸ்தூரி தேவி அவர்களும் மரக்கன்றுகளை பெற்றுக் கொண்டனர் மருத்துவமனைக்கு வரக்கூடிய பயனாளிகளுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் R. ரெனால்டு ராஜேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் D.ஸ்டிபன் பால், மாவட்ட இளைஞரணி செயலாளர் U. செந்தில் குமார், திருநின்றவூர் நகர செயலாளர் P. சதிஷ், திருநின்றவூர் நகர துணை செயலாளர் N. ரமேஷ் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
✒ செய்தியாளர்பிரேம்குமார்

No comments
Thank you for your comments