Breaking News

லஞ்சம் வாங்கிய ஆவண காப்பக ஊழியர் கைது... வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர்:

ரூ.1500 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பக ஊழியர் லஞ்சம் ஒழிப்பு போலீசாரால் கைது... விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவண பாதுகாப்பு அறை அலுவலர் சிவக்குமார் என்பவர் விருத்தாசலம் திருவிக நகர் பழனி மகன் அருண்தாமரை என்பவரிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கியதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடித்து  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருண்தாமரையின் தந்தை பழனி என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சொரோனா நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளர் இறந்த பழனிக்கு இரண்டு மனைவிகள் உள்ளது. இவர்களுக்குள் சொத்து சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

இந்நிலையில் அருண் என்பவர் சிட்டா நகல் எடுப்பதற்காக ஆவண பாதுகாப்பு அறையில் பணிபுரியும் சிவக்குமார் என்பவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சிவகுமார் ரூ.1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் என்று அருண் சிட்டா பெறுவதற்கு ரூ.1500 லஞ்சம் கொடுத்து உள்ளார்.

மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்பு துறை ஆய்வாளர்கள் மாலா, சண்முகம், தலைமையிலான காவலர்கள் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர்

No comments

Thank you for your comments