Breaking News

மாவட்டக் கல்வி அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக கமலாதேவி என்கிற தலைமையாசிரியர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் உள்ளூர் அதிமுக பிரமுகர் உடன் நெருக்கமான தொடர்பு கொண்டு அப்பகுதியில் அதிமுகவை வளர்த்து வரும் வகையில் பள்ளியில் அதிமுக பொதுக் கூட்டங்கள் மற்றும் பல்வேறு ஊழல், லஞ்சம் உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான பல செயல்களை செய்து வருகிறார்.

இவை அத்தனைக்கும் தகுந்த புகைப்படம் ஆதாரங்களுடன் கல்வி மாவட்ட அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  

கமலாதேவி... கமலாதேவி...

அயோக்கியத்தனம்... அயோக்கியத்தனம்...

மொள்ளமாரி தனம்... மொள்ளமாரித்தனம்... 

கண்டித்து ஆர்ப்பாட்டம்...  கண்டித்து ஆர்ப்பாட்டம்... 

நடவடிக்கை எடுங்க...   நடவடிக்கை எடுங்க ...

பள்ளிகூடம்...  பள்ளிகூடம் ... 

வகுப்பறை...  வகுப்பறை ... 

இருபத்தி ஒரு லட்சம் ... இருபத்தி ஒரு லட்சம் ... 

அபேஸ்  பண்ணு...  

கமலாதேவி ராஜ்ஜியமா ... 

 தமிழக முதல்வர் ஸ்டாலின்  ஐயா மானம் போகுது 

கமலாதேவி அண்ணா திமுகவுடன் கூட்டுக் கொள்ளை

அண்ணா திமுக கூடாரமாக மாறிப்போச்சு என்று பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும்  புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலாதேவி மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்   என்று  விருத்தாசலம்  மாவட்ட கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments