Breaking News

பாஜக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜமுனா பழனிவேல் வேட்புமனு தாக்கல்

விருத்தாசலம்

முகாசபரூர் 7-வது வார்டு பாஜக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜமுனா பழனிவேல்  வேட்புமனு தாக்கல் செய்தார்..


கடலூர் மாவட்டம்  விருத்தாசலம் ஒன்றியம் முகாசபரூர் 7-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக ஜமுனா பழனிவேல்  பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

இவர் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக சென்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதில் விருத்தாசலம் நகர, தெற்கு, வடக்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், விருத்தாசலம் நகர  மாநில மாவட்ட அணி, பிரிவு நிர்வாகிகள்  பெருந்திரளாக மாவட்ட தலைவர்  கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

இதில் கடலூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் வேட்டக்குடி எழிலரசன், தொழில் பிரிவு மாவட்ட துணை தலைவர் கௌதமன், தெற்கு ஒன்றிய தலைவர் தங்க.வெங்கடேசன், வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பரமசிவம், மாவட்ட செயற்குழு விஸ்வநாதன், மாவட்ட துணை தலைவர் இளமங்கலம் செந்தில்குமார், நகர பொதுச்செயலாளர் செல்வராஜ், முன்னாள் ராணுவ பிரிவு வடக்கு ஒன்றிய தலைவர் பழனிவேல், முன்னாள் ராணுவப் பிரிவு வட்டச் செயலாளர் வேலுமணி, விவசாய அணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஊடகப்பிரிவு மாவட்டசெயலாளர் புவனேஸ்வரி, கலை கலாச்சாரப் பிரிவு இந்துமதி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments