மங்களூரில் சாலை பணியை விரைந்துமுடிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்...!
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள மங்களூர்-மாங்குளம் செல்லும் சாலை உள்ளது. இவ்வழியாக சேலம் -கடலூர் செல்லும் சாலை உள்ளது. அப்பகுதி மக்கள் வெளியூர் செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மங்களூரில் இருந்து மாங்குளம் செல்லும் சாலை சிதிலமடைந்து காணப்பட்டதால் 4 மாதங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது
சில மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.
தற்போது மழைக்காலங்கள் என்பதால் அச்சாலை சேர் சகதியோடு காணப்படுகிறது. இந்நிலையில் சாலையில் சென்ற ஈச்சர் சரக்கு வாகனம் திடிரென சேரில் சிக்கி பள்ளத்தில் மாட்டிக்கொண்டது.
இதனை அறிந்த பொதுமக்கள் ஈச்சர் வாகனத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டும் முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் திடிரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள்அலட்சியம் படுத்துவதாக கூறி சாலைபணியை விரைவில் முடித்துதரவேண்டுமென கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவலறிந்து வந்த சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி தலைமையிலான காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலை போடப்படும் என தெரிவித்தனர்.
இதனை ஏற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



No comments
Thank you for your comments