அரசு பொதுதுறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி :
அரசு பொதுதுறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருவதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகை புரிந்த திருவள்ளூர் தொகுதி எம்.பி.டாக்டர்.ஜெயகுமார், இன்று நடைப்பெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று கொண்டிருந்த போது திடீரென நான் சிறிய மைக்கில் பேசமாட்டேன் என தனியாக சென்று நின்று அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காங்கிரஸார் அவரை சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேச வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.விஜய்வசந்த் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments
Thank you for your comments