Breaking News

வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

விருத்தாசலம்

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில்  விழிப்புணர்வு பிரச்சாரம்...

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சார துண்டறிக்கைகள் வழங்கபட்டது. 

விருத்தாசலம் நீதிமன்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி  ஆணைக்கிணங்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஆலோசனைப்படி  விருத்தாசலம்  வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி ஜெயசூரியா வழிகாட்டுதலின் படி சட்ட விழிப்புணர்வு முகாம்   விருதாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருதாச்சலம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் B - பட்டியல் வழக்கறிஞர் சிவமணி கலந்து கொண்டு  பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கினார். 

இந்த அறிக்கையில்  கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களுக்கும் மைனர் குழந்தைகளுக்கும் ஜீவனம்சம் பெறவும், 

கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்  ஜாமீன் பெறவும், 

சொத்துரிமை மற்றும் வாடகை பிரச்சினைகளால் பாதிக்க பட்டவர்கள் வழக்கு நடத்தவும் 

தொழிற்சாலை  விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ஒரு லட்சம் மிகாமல் இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனைக்குழு மூலம் 

நீதிமன்றங்களுக்கு செல்ல, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட மற்றும் வட்ட குழுக்கள்  செயல்படுகிறது

இதில் ஏழை மக்கள் இலவசமாக சட்ட ஆலோசனை பெறவும் வழக்குகளை நடத்தவும் நீதிமன்றங்கள் வசதி உள்ள எல்லா ஊர்களிலும் சட்டப்பணிகள் குழு செயல்பட்டு வருகிறது

இதற்காக நலிந்தோர் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது இல்லை என  பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கினார்கள். 

இதில் வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர்கள்  மற்றும்  பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments