Breaking News

ஊராட்சி மன்ற தலைவர்களிடம் லஞ்சம் கேட்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்

விருத்தாசலம் 

ஊராட்சி மன்ற தலைவர்களிடம் லஞ்சம் கேட்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரியை கண்டித்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இதில் கோபுராபுரம், விஜயமாநகரம், ரூபநாராயணநல்லூர், எம்.பட்டி, புலியூர், கா.இலமங்கலம், எடையூர், வண்ணான்குடிகாடு, விளாங்காட்டூர், பேரலையூர், எம்.புதூர், சாத்துக்கூல்கீழ்பாதி, சித்தேரிகுப்பம், சின்னப்பரூர்,  முகுந்தநல்லூர், பரவலூர் உள்ளிட்ட 18 பஞ்சாயத்துகளுக்கு மட்டும் அரசு வழங்கும் முழு நிதி அனுப்பி விட்டு மீதமுள்ள பஞ்சாயத்துகளுக்கு அனுப்பாமல் ஊராட்சி மன்ற தலைவர்களை தொடர்ந்து அவமதித்து வரும் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி கண்டித்து ஊராட்சிமன்றத் தலைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஊராட்சி தலைவர்களுக்கு மட்டும் பணியாணை வழங்கிவரும் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமாரி என்பவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

வெளிப்படையாக லஞ்சம் கேட்டு முறைகேடாக நடந்து கொள்ளும் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி மற்றும் அலுவலக நிர்வாகத்தின் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர்கள் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 20- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் 


 

No comments

Thank you for your comments