காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2321 பதவிகளுக்கு போட்டியிட 8603 பேர் வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2321 பதவிகளுக்கு போட்டியிட 8603 பேர் வேட்புமனு தாக்கல்செய்து உள்ளனர்.
4 மடங்கு பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ள நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படுகிறது.
மறுபரிசீலனை பணி துவங்கியது வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் அனைவரும் வட்டார அலுவலகத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 98 கவுன்சிலர்களுக்கும், 274 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், 1938 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும்,என மொத்தம் 2321 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி மற்றும் 9ஆம் தேதி இருகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 15ம் தேதி முதல் நடைபெற்று வந்தது
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான நேற்று வரை, 11 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 86 பேரும் 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 535பேரும், 274 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 1395 பேரும், 1938 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6587 பேரும், என மொத்தம் 8603 பேர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளை காட்டிலும் அதிகமாக 4 மடங்கு பேர் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதால் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் 25-ம் தேதி கடைசி நாளாகும்.
வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட 3 ஒன்றியங்களில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தலும்,
ஶ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 2 ஒன்றியங்களில் அக்டோபர் 9 ஆம் தேதி 2ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன.
இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரிவடைந்துள்ளது.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், குன்றத்தூர், வாலாஜாபாத், படைப்பை பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட அனைவரும் தங்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளவா என அனைவரும் ஒன்று கூடி காத்திருக்கின்றனர்.




No comments
Thank you for your comments