Breaking News

உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையில் கூடுதல் முதலீடு தேவை : ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து

புதுடெல்லி, செப்.23-

இந்தியாவின் வளர்ச்சி நிலையானதாகவும் தொடர்ந்து பராமரிக்க கூடிய நிலையிலும் அமைவதற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் கூடுதலான முதலீடு அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ஐஐஎம்ஏ அமைப்பின் தேசிய மானேஜ்மென்ட் மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.  இந்த மாநாட்டில் கலந்துகொண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசினார்.

கொரானா தொற்றுக்கு பிந்திய காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி நிலையானதாகவும் பராமரிக்க கூடிய தாகவும் அமையவேண்டும் அதற்கு சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு உழைப்பில் தொழிலாளர் துறை சீர்திருத்தம் நீயே உற்பத்திப் பொருட்களுக்கு புதிய சந்தைகளை கட்டவேண்டும் ஆகியவை அவசியம். அதன் மூலம்தான் நாம் தொடர்ச்சியான வளர்ச்சியை பெற முடியும் என்று தாஸ் கூறினார்.

வளர்ச்சி நிலையானதாக புதிய வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்கி ஆக வேண்டும்.  வளரும் நாடுகளின் ஏழை மக்களையும் நலிந்த பிரிவினரையும் கொரானா தொற்று கடுமையாக பாதித்துள்ளது.  அவர்களின் நுகர்வு அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பாரம்பரியமாக நுகர்வு அதிகரித்தால்தான் ஒட்டுமொத்தமாக தேவை அதிகரிக்கும் அதன் காரணமாக உற்பத்தி பெருகும். வளர்ச்சி நிலையானதாக அமையும்.

இதற்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். இந்திய நிதி அமைப்பு முறை மேம்பட்டதாக மாற வேண்டும் இந்தியாவிலும் பல அமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு வசதியாக சுகாதாரத்துறை, கல்வித்துறை, புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் வளர்ச்சிக்கான அவசியம். தொழிலாளர் துறை மற்றும் சந்தையில் நாம் ஊக்குவிக்க வேண்டும். டிஜிட்டல் உள்கட்டமைப்பை நாம் மேம்படுத்துவது அவசியம். அதன் மூலம் கொரானா தொற்றுக்கு பிந்திய வாய்ப்புக்களை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். 

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசினார்.

No comments

Thank you for your comments