Breaking News

அரசு பிரதிநிதி பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி ராஜிநாமா

சென்னை, செப்.23-

நாகா இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி தமிழ்நாடு மாநில ஆளுநராக பொறுப்பேற்றார் அதைத்தொடர்ந்து இந்திய அரசுப் பிரதிநிதி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி 2014ம் ஆண்டு நாகாலாந்து அமைதிப் பேச்சு வார்த்தைகளுக்கான இந்திய அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 2019 நாகாலாந்து ஆளுநர் ஆகவும் நியமிக்கப்பட்டார்.

நாகாலாந்து மக்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கை அறுந்து போய்விட்டது அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

நாகா பேச்சு வார்த்தை அரசு பிரதிநிதியாக ஆர்.என். ரவியுடன் பேச்சு நடத்த நாகாலாந்து மக்கள் விரும்பவில்லை.

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இப்பொழுது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவர்களில் யாராவது ஒருவர் இந்திய அரசுப் பிரதிநிதியாக நியமிக்கப்படலாம். அதற்கு உதவும் வகையில் ரவி இந்திய அரசு பிரதிநிதி பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

No comments

Thank you for your comments