Breaking News

சமூகநீதி நாளாக விசிக சார்பில் அனுசரிப்பு

விருத்தாசலம்

விருத்தாசலம் நகர விசிக சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அனுசரிப்பு...

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி நகர செயலாளர் முருகன் தலைமையில் ஏற்கப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, மாநில துணை செயலாளர் நீதி வள்ளல், மாநில ஊடக மைய துணை செயலாளர் ராஜ்குமார், மாநில துணை செயலாளர் குரு,  தொகுதி செயலாளர் ஐய்யாயிரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பூக்கடை ரவி, விருத்தாசலம் நகர ஒருங்கிணைப்பாளர் வே.மாஅருள், நகர பொருளாளர் மேட்டு காலனி முருகன், தொகுதி துணை துணை அமைப்பாளர் தலித் ஏழுமலை, மாவட்ட ஊடக மைய துணை அமைப்பாளர் தன்ராஜ், ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, திருஞானம், ஒன்றிய துணை செயலாளர் தென்றல், ஒன்றிய பொருளாளர் ஸ்டுடியோ சக்திவேல், சிறுத்தை சிவா மங்கலம்பேட்டை நகர செயலாளர் விடுதலை அம்பேத், ஒன்றிய பொருளாளர் எழில் வான் சிறப்பு, ஒன்றிய துணை செயலாளர் கவியரசு, காட்டுப்பரூர் கண்ணன் பங்கேற்றனர்.


No comments

Thank you for your comments