விசிக சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கடலூர்:
நல்லூர் ஒன்றியம் ஐவதகுடி சமத்துவபுரத்தில் விசிக சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
செப்டம்பர் 17 தந்தை பெரியார் 143 -வது பிறந்தநாள் விழா சமூக நீதி நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கொண்டாடப்படுகிறது
அதன் ஒருபகுதியாக கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியம் ஐவதகுடி சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு
மாநில துணைச்செயலாளர் நீதிவள்ளல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சி நல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது
இதில் வழக்கறிஞர் காமராஜ், இளையராஜா, மாவட்ட நிர்வாகிகள் இசை, மாவட்ட துணை அமைப்பாளர் நாரையூர் என்.எஸ்.பெரியசாமி, முனுசாமி, ஒன்றிய நிர்வாகிகள் பழக்கடை பிரகாஷ், சிறுநல்லூர் சிவா, கருப்பசாமி, சேப்பாக்கம் பிரகாஷ், செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி, சேப்பாக்கம் செந்தில், குணசேகரன், ஆதியூர் ஐயப்பன், தர்மலிங்கம், சேப்பாக்கம் இளையராஜா உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு உறுதி மொழி ஏற்றனர்

No comments
Thank you for your comments