நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள் பணம் கொடுத்து வாங்க படுகிறார்கள் - சீமான் பகீர் குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:
தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி... பறக்கும் படை அமைப்பார்கள்... அப்பாவி மக்கள் இடம் பணம் பறிப்பார்கள்.. ஆகவே தேர்தல் ஆணையத்தையே சீர்திருத்த வேண்டும் என காஞ்சிபுரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரணிபுத்தூர், சுங்குவார்சத்திரம், எடயார்பாக்கம், வாலாஜாபாத், படப்பை, வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டு வந்த நிலையில் காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள திருமண மண்டபம் கலந்தாய்வு நடைபெற்றது.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது,
தேர்தல் ஆணையம் என்பது நாடக கம்பெனி.... பறக்கும் படை அமைப்பார்கள்... அப்பாவி மக்கள் இடம் பணம் பறிப்பார்கள்.... ஆகவே தேர்தல் ஆணையத்தையே சீர்திருத்த வேண்டும்.
தற்போது அரசியல் என்பது சாதி, மதம், சாராயம், கவர்ச்சி, பணம் ஆகிய ஐந்து தூண்களை உங்களால் கட்டமைக்கப்படுகிறது. சாதி மதம் சாராயம் தாண்டினாலும் பணத்தை தாண்ட முடியவில்லை.
9 மாவட்ட தேர்தலில் மூக்குத்தி அண்டா குண்டா பட்டு சேலைகளை மொத்தமாக அள்ளிச் சென்று உள்ளார்கள். எம்பி எம்எல்ஏக்கள் அதைவிட அதிக வருமானம் ஈட்டும் தொழிலாக உள்ளாட்சி பதவி உள்ளது.
குறுநில மன்னர்கள் போல உள்ளாட்சி பதவியில் உள்ளவர்கள் செயல்படுவார்கள்.
குறைந்த ஜனநாயகம் அதிகபட்சம் பணநாயகம் ஆக மாறியுள்ளது.
இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட செயலாக மாறியுள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி எனக் கூறும் இவர்களை நாம் தள்ளுபடி செய்ய வேண்டு.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை எடுத்தூக்காட்டாக கூறும் நீங்கள் ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியுமா?
ஓரே நாடு, ஓரே ரேஷன்கார்டு, ஓரே ஜிஎஸ்டி என கூறும் நீங்கள் உள்ளாட்சித் தேர்தலை கூட ஒரே நாளில் நடத்த முடிய வில்லை என்று ஆவேசமாக பேசினார்.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீஷ் பாண்டியன், அன்பு தென்னரசு, கதிர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சால்டின் சாமுவேல், மாவட்ட தலைவர் பிரகதீஸ்வரன், மாவட்ட பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments