பெண்ணாடத்தில் விசிக சார்பாக சமூக எழுச்சி நாள் விழா...
கடலூர்
பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் விசிக கட்சி சார்பாக தந்தை பெரியார் 143வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பழைய பேருந்து நிலையத்தில் எழுச்சித் தமிழர் தலைவர் தொல் திருமாவளவன் அறிவுறுத்தலின்படி பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சமூக எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் மகன் பிரபாகரன் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் செம்மல், ஒன்றிய அமைப்பாளர் சோழன் நகர் அறிவழகன், திராவிட கழக நகர தலைவர் தாகோசம்பந்தம், நகர அமைப்பாளர் சுப்ரமணியன், நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராசு, டாக்டர் அன்பினுருவன், நகர துணை செயலாளர் சிங்கமுத்து, ஒன்றிய துணை செயலாளர் கல்யாணசுந்தரம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் சிவா, நகர அமைப்பாளர் ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெரியார் கொள்கை வழி நடப்போம்! அம்பேத்கர் வழி நடப்போம் என உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியை பெண்ணாடம் திருமா வகையறாக்கள் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

No comments
Thank you for your comments