ஊராட்சி மன்றத் தேர்தலில் கணவன் மனைவி இருவரும் நேருக்கு நேர் போட்டி...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட நத்தாநல்லூர் ஊராட்சியில் பொது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஊராட்சி மன்றத தலைவருக்கான தேர்தலில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மணி என்பவரும், அவரது மனைவி ராணி, என கணவன் மனைவி இருவரும் போட்டியிடுகின்றனர்.
ஒரே நேரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் கணவன் மனைவி இருவரும் நேருக்கு நேர் போட்டியிடுவது வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments
Thank you for your comments