Breaking News

9 குற்றவாளிகளுக்கு ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான 

1 ) டேவிட் ( 22 ) த/பெ ரவி, குணசேகரன் நகர், சதாவரம், காஞ்சிபுரம், 

2 ) வெள்ளை ( எ ) கோபால் ( 47 ) த/பெ கபாலி, பெருமாள் கோயில் தெரு, பெரிய காரை, காஞ்சிபுரம் , 

3 ) ராமலிங்கம் ( 48 ) த/பெ கபாலி, பிராமணர் தெரு, பெரிய காரை, காஞ்சிபுரம், 

4 ) ரஜினி ( 41 ) த/பெ சுப்ரமணி, வ.வு.சி. நகர், ஓரிக்கை, காஞ்சிபுரம், 

5 ) அரவிந்த் ( எ ) டைகர் அரவிந்த் ( 22 ) த/பெ பாண்டியன், நேரு நகர், காஞ்சிபுரம் 

6)ஆனந்தன் ( 38 ) த/பெ முத்து, பெருமாள் கோயில் தெரு, சிறுவாக்கம் கிராமம், 

7 ) மில்டன் ( எ ) மதனதாஸ் ( 43 ) த/பெ பச்சையப்பன், பெருமாள் கோயில் தெரு, விப்பேடு, காஞ்சிபுரம், 

8 ) முரளி ( 28 ) த/பெ மணி, கருப்படைதட்டடை, ஏரிவாக்கம், காஞ்சிபுரம் மற்றும் 

9 ) மணிகண்டன் ( 38 ) த/பெ நாராயணசாமி, கருப்படைதட்டடை, ஏரிவாக்கம், காஞ்சிபுரம்

ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் அவர்கள் மேற்படி நபர்களை 

ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments