உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் விழிப்புணர்வு
திருவள்ளூர்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பூவிருந்தவல்லி சார்பாக இன்று உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் விழிப்புணர்வு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் வர்கீஸ் அவர்கள் உத்தரவின் பெயரில் பொது சுகாதார நிலைய துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் இன்று பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் கல்பனா மற்றும் மருத்துவர் தீபலட்சுமி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் கலந்துகொண்டுபொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றனர் இதில் கல்பனா அவர்கள் பேசுகையில் தற்பொழுது நாய் கடி என்பது சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது நாய் கடித்து நாம் அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் பேராபத்து விளையக்கூடும் அது மரணத்தில் போய் முடிந்து விடும் இந்த மரணம் சாதாரணமாக இருக்காது.
கொரோனா வைரஸினால் இறந்த உடலை நம்மிடத்தில் எப்படி ஒப்படைக்க மாட்டார்களோ அதேபோல் நாய் கடித்து இறந்தவர் உடலை நம்மிடம் ஒப்படைக்க மாட்டார்கள். இறப்பதற்கு முன் அவர்களுடைய நிலைமை மிகவும் கடினமாக இருக்கும். ஆகவே நாய் மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள விலங்கினங்கள் கடித்தாலும் உடனே சோப்பினால் கைகளை கழுவி விட்டு பின்பு மருத்துவ ஆலோசனை வழங்கி அதற்குண்டான மருத்துவத்தை செய்ய வேண்டும் என்பது குறித்தும் மிகவும் தெளிவாக விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களும் சுகாதாரத்துறையில் அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments