Breaking News

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட  ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ( History Sheet Rowdies ) மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 

1) தீபக் (23) த/பெ.ஏழுமலை, தெருவீதியம்மன் கோயில் தெரு, மணிமங்கலம் மற்றும் 

2 ) ராஜசேகர் (35) த/பெ.ராஜேந்திரன், தோப்புத்தெரு, திருப்புலிவனம் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா ஆகியோர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட இருந்தவர்களை உத்திரமேரூர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான குழு மேற்படி நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

No comments

Thank you for your comments