முதலமைச்சருக்கு முன்னால் ஊராட்சிமன்றதலைவர் சம்பத்குமார் உட்பட பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு...
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் அடரி அருகே பொயணப்பாடி கிராமத்தில் வேம்பு,ஆலம்,புளியம்,இச்சிலிமரம் நிறைந்த 12 ஏக்கர் நிலப்பரப்பில் செல்லியம்மன், ஆண்டவர் திருக்கோயில்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் ஆகும் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து செல்கிறார்கள்.
பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் அனைத்து காரியமும் நிறைவாகிறது மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக வேப்பூர் வட்டத்தில் திகழ்கிறது. இக்கோயிலுக்கு போதுமான சுற்றுசுவர் இல்லாமல் உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பட்ஜட் தாக்கல் செய்தார் அதில் பொயணப்பாடி செல்லியம்மன், ஆண்டவர் திருக்கோயிலுக்கு மதில்சுவர் மற்றும் நந்தவனம் பூங்கா அமைப்பதற்கு ரூ 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.
இதனை அறிந்த பொயணப்பாடி முன்னால் ஊராட்சி மன்ற தலைவரும், கவுன்சிலருமான இரா.சம்பத்குமார் தலைமையில் பொதுமக்கள் வெடிவெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
பின்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பரிந்துரை செய்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் ஆகியோர்களுக்கு முன்னால் ஊராட்சிமன்றதலைவர் இரா.சம்பத்குமார், பொதுமக்கள், பக்தர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments