Breaking News

விலை உயர்வைக் கண்டித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி, நெற்றியில் பட்டையிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்புகேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சங்கு ஊதி, நெற்றியில் பட்டையிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர், 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ரமேஷ், முருகவேல், சிலம்பரசன், சாமிதுரை, வசந்த், கனகராஜ், தமிழ்மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரை நிகழ்த்தினார். 

மாதர்சங்க வட்ட செயலாளர் அன்புச்செல்வி, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, மாவட்ட செயலாளர் குமரவேல், லெனின், சத்யா, ராகுல் உள்ளிட்டர் கலந்து கொண்டனர

No comments

Thank you for your comments