Breaking News

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் தற்கொலை முயற்சி

சென்னை:

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27) துப்பாக்கியால் சுட்டு  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

வேலுச்சாமி ஆ/24, த/பெ பொன்னுசாமி, மந்திக்குளம் கிராமம், சிக்கலூர் போஸ்ட்,, கரூர் தாலுக்கா, தர்மபுரி மாவட்டம் (PC 49700 - 2017 Batch)  என்பவர் (கடந்த ஐந்து தினங்களாக) வாலாஜா சாலையில் உள்ள பழைய அரசு விருந்தினர் மாளிகையில்  6 .00 மணி முதல் 10.00 மணி வரை Guard பணியில் இருந்த போது சுமார் 20.15 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தொண்டை குழியில் சுட்டுக்கொண்டார். 

குண்டு துளைத்ததில் காவலர் வேலுச்சாமியின் கீழ்தாடை எலும்புகள் நொறுங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எதற்காக அவர் இப்படி செய்தார் இதற்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


No comments

Thank you for your comments