லாரி ஏற்றி கொன்றால் என்ன செய்வது...? இரவு நேரத்தில் செம்மண் கடத்தல்... நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்....
கிருஷ்ணகிரி செப்.17-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் பெருமளவு செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இதில் அரசுக்கு தெரியாமல் ஒரு சில அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கி இரவு வேளைகளில் பெருமளவு செம்மண் கடத்தல் நடந்து வருகிறது.
இதில் செம்மண் கடத்தும் மாபியாக்கள் இரவு 7 மணிமுதல் தங்களது செம்மண கடத்தும் பணிகளில் ஈடுபட்டு அதிகளவு வேகத்துடன் விபத்தை ஏற்ப்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குவதும், சுற்று சூழலுக்கு மாசு ஏற்ப்படுத்தும் வகையில் மிகுந்த சத்தம் ஏற்ப்படுத்தும் ஹாரன் அடித்துக்கொண்டும் வண்டியை இயக்கி வருகின்றனர் (வாகன எண் TN 24 7837).
மெதுவாக செல்லமாறு வண்டி ஓட்டுனர்களை கேட்டால் உனக்காக வண்டியை நான் ஓட்ட முடியாது... உன்னால் முடிந்ததை பர்த்துக்கொள் என்றும்.... யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்றும்.... ஆணவத்துடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் அவர்கள் உங்கள் மீது வண்டியை விட்டு ஏற்றினால் என்ன செய்வது... நாளை RI VAO விட்டு விசாரிப்பதாக கூறி போனை துண்டிப்பு செய்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

No comments
Thank you for your comments