விஸ்வகர்ம ஜெயந்தி அரசு விடுமுறையாக அறிவிப்பு வெளியிட கோரிக்கை மனு
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சிவன் கோயிலின் முன்பு தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில் விஸ்வ கர்மா விழா நடைபெற்றது.
இதில் விஸ்வகர்ம ஜெயந்தி அரசு விடுமுறையாக அறிவிப்பு வெளியிட கோரி கிராம நிர்வாக அலுவலர் மூலமாக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது
அந்த மனுவில் கூறியிருப்பதாவது நாங்கள் உலகம் தோன்றிய காலம் முதல் தேவசிற்பி விஸ்வகர்மாவை உருவாக்கப்பட்ட இந்த உலகத்தில் செப்டம்பர் – 17 விஸ்வகர்ம ஜெயந்தி தினமான இன்று அண்டை மாநிலங்கள் அரசு விடுமுறையாக அறிவித்து விடுமுறை விடுகிறார்கள் மத்திய அரசாங்கமும் விஸ்வகர்ம ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து உள்ளது
தமிழ் நாட்டுக்கும் இந்த விஷ்வகர்ம ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து ஒரு நாள் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி விஸ்வகர்ம ஐந்த் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கினார்.
அதேபோல தற்போது திமுக அரசானது இந்து விஸ்வகர்ம ஜெயந்தி அரசு விடுமுறை ஆகவும் அரசு விழாவாகவும் அறிவித்திட வேண்டும் என கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் மாநில தலைவர் மணிகண்டன் தலைமையில் மனு அளித்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் அணி நிர்வாகிகள் ரவி ஆசாரி, ஜெயராம் ஆசாரி, தட்சிணாமூர்த்தி, விக்கி, நமச்சிவாயம், வேலு, சங்கர், கருவி ரமேஷ், ஆர்.விக்கி, விக்னேஷ், குணசேகரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

No comments
Thank you for your comments