மது போதையில் பணியாற்றும் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர்... பொதுமக்கள் பெரும் அவதி...
சென்னை :
சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் முத்துகிருஷ்ணன் மது போதையில் பணியாற்றும் அவலம்...
சென்னை-கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார் முத்துக்கிருஷ்ணன்.
முத்துக்கிருஷ்ணன் மீது பொதுமக்களிடையே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து வட்டாட்சியர் சித்ராவின் பார்வைக்கு சென்றது.
இதுகுறித்து வட்டாட்சியர் சித்ரா, பலமுறை தங்கள் மேலதிகாரிகளிடம் உதவியாளர் முத்துக்கிருஷ்ணனைப்பற்றி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் முத்துக்கிருஷ்ணன் மீது எடுக்கப்படவில்லையாம்...
இந்நிலையில், கோட்டூர்புரத்தை சார்ந்த மூதாட்டி விதவை பணத்திற்கு விண்ணப்பிக்க இன்று வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.
வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் முத்துகிருஷ்ணன், இந்த மூதாட்டியை உதாசீனப்படுத்தியதோடு அல்லாமல், பணம் வைத்திருந்தால் உள்ளே இரு... இல்லையேல் வெளியே போ... என அவமானப்படுத்தி பேசியுள்ளார்... அதோடு மட்டுமின்றி நாயை விரட்டுவதுபோல் விரட்டி உள்ளார்.
அரசு அலுவலகம் எப்போது இவருடைய சொத்தாக மாறியது என்று தெரியவில்லை... பொதுமக்களுக்கு வேலைசெய்ய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு வேலை ஆள், பொதுமக்கள்தான் இவர்களது எஜமான் என்பதை மறந்து தான்தோன்றிதனமாக நடந்துகொள்கிறார்.... என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது.
தகவல் அறிந்து, அங்கு செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களிடம் உன்னால் என்ன செய்ய முடியுமோ பார்த்துக்கொள் என்று கூறி வீடியோவுக்கும், புகைப்படுத்துக்கும் போஸ் கொடுத்துள்ளார் முத்து கிருஷ்ணன்....
இதுபோன்றோர்கள் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்குமா... மாவட்ட நிர்வாகம்... என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது...
மக்களின் ஆட்சி இது என்று மக்களுக்காக ஆட்சி நடத்துக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... அவரது ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவோரை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்... அப்போதுதான் இதுபோன்றோர் திருந்துவார்கள்... என்கின்றனர் சமூக ஆர்வலர்களும்.. பொதுமக்களும்...
வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆட்டம் முற்றுபெறுமா...? அல்லது முடிவில்லா தொடர்கதையாகுமா...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

No comments
Thank you for your comments