வட்டாட்சியரை கண்டித்து சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டம்
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியரை கண்டித்து சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டம்..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில், திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணியிடம் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வரும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நல்லூர் பகுதியில் 100 ஏக்கர் 34 சென்ட் பெரிய ஏரியை மற்றும் அதன் பாசன வாய்க்கால்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாண்டவராய வயகராவிற்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்து கலைந்து சென்றனர்.

No comments
Thank you for your comments