உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்குக் கொரோனா தொற்று.. ! - மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சம்
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்குக் கொரோனா-பள்ளி தூய்மை படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டது. 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளி திறந்து 3 நாட்களில் 4 ஆசிரியைகள் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியை ஒன்று மற்றும் இரண்டாம் தேதி வகுப்புகள் எடுத்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது.
இந்நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர் சக ஆசிரியர்களுக்கு மற்றும் பாடம் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய பள்ளி முடிவெடுத்துள்ளது, பள்ளியை தூய்மை செய்யும் பணியில் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments