கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று களியாக்காவிளை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. முத்துக்குமரன் அவர்கள் குழித்துறை பகுதியில் காவலர் சகிதம் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கருங்கல் பகுதியை சேர்ந்த ஜான் கபோட் (34), ஷாஜன்(23) மற்றும் ஜீனு(25) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களை தீவிர விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவர்கள் வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.

No comments
Thank you for your comments