Breaking News

தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களுடன் "ஒரு முறை திட்டத்திற்கான"  கலந்தாய்வுக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி  தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தரமான கண்டுமுதல் அரிசியை பொது விநியோக திட்டத்துக்கு வழங்க நடப்பு கொள்முதல் பருவம் 2020 - 2021 ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை கழக அரிசி ஆலை மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக செயல்பட்டு வரும் தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு தரமான  அரிசியை வழங்கி வருகிறது.

இந்நிலையில் "ஒரு முறை திட்டத்தின்" கீழ் 15.09.2021 முதல் 15.11.2021 வரை அரவை செய்ய காஞ்சிபுரம் மாவட்ட தனியார் அரிசி அரவை ஆலை உரிமையாளர்களை அழைத்த மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் தனியார் அரவை முகவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 40 அரவை ஆலை முகவர்கள் கலந்து கொண்டனர். 

மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் பேசுகையில்,

இத்திட்டத்தில் சேர விரும்பும் தனியார் அரவை ஆலைகள் color sortex உள்ளிட்ட நவீன வசதிகள் இருக்க வேண்டும் என்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு கழகத்தில் உள்ள நெல்லினை பெற்று தரமான அரிசியை பொது விநியோகத்திற்கு வழங்குமாறும் மற்றும் இத்திட்டத்தில் சேர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பும், தரமான அரிசியை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் முதுநிலை மண்டல மேலாளர் முனைவர் திரு.வி.செந்தில்குமார் அவர்கள் “ஒருமுறை திட்டத்தின்” பற்றிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கினார்.

✒ செய்தியாளர் E. ஜாபர்

No comments

Thank you for your comments