ஆப்கானிஸ்தானில் இந்தியா மேலும் முதலீடு செய்யுமா? - அமைச்சர் நிதின் கட்காரி பதில்
புதுடெல்லி, செப்.19-
ஆப்கானிஸ்தானத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மேலும் இந்தியா முதலீடு செய்யுமா என்று செய்தியாளர் ஒருவர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியிடம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
அமைச்சர் நிதின்கட்காரி பதில் விபரம்:
ஆப்கானிஸ்தானத்தில் இந்தியா 300 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது ஆப்கானிஸ்தானத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக சல்மா அணையை இந்தியா கட்டியது.
ஆப்கானிஸ்தானத்தில் சாலைப்போக்குவரத்து சீரடைய பல இடங்களில் சாலைகளை இந்தியா அமைத்துள்ளது பள்ளிகளிலும் முதலீடு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நட்பு நாடு என்ற வகையில் ஆப்கானிஸ்தானத்தில் மேலும் சாலைகள் அமைக்க உதவி செய்யும்படி கோரி இருக்கிறார்கள்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானத்தில் சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு அங்கீகாரம் செய்வதில் மிகவும் கவனமாகவும் கூட்டாகவும் உலக நாடுகள் முடிவு செய்ய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானத்தில் அரசியல் அதிகாரம் அந்நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் இன்னும் கிடைக்கவில்லை அதனால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசி ஆப்கானிஸ்தானத்தில் மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்தியா முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்வார் என்று இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் கூறினார்.
No comments
Thank you for your comments