Breaking News

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:   

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

இதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இதர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வளிமண்ட மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இதுபோன்ற வானிலை மாற்றங்கள் நிலவுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments