Breaking News

ரூ 250 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் குஜராத் கடலில் ஈரான் படகு சிக்கியது

அகமதாபாத் 

ரூபாய் 250 கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருளுடன் குஜராத் கடற் பகுதிக்கு வந்த ஈரான் நாட்டு கப்பல் ஒன்றை குஜராத் மாநில கடலோர காவல்படையும் பயங்கரவாத எதிர்ப்பு படையும் இணைந்து கைது செய்தனர்.



ஈரான் நாட்டு கப்பலில் இருந்து 7நாட்டினர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அங்கு அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

சனிக்கிழமை இரவு குஜராத் கடலோர காவல் படைக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது ஈரான் நாட்டில் இருந்து போதை மருந்துப் பொருள் கடத்தப்பட்டு குஜராத் மாநில கடற்கரையோரம் கை மாற்றப்பட உள்ளது என்று தகவல் கிடைத்தது,

இந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து மாநில கடலோர காவல்படையின் மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு படையும் கூட்டாக எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஈரான் நாட்டுக் கப்பல் சர்வதேச கடல் எல்லை பகுதியில் இருந்து குஜராத் மாநில கடல் கரை பகுதியில் நுழைந்ததும் இந்திய பாதுகாப்பு படையினர் கப்பலை சுற்றி வளைத்தனர்.

ஈரான் நாட்டு கப்பலில் ஏறி சோதனையிட்டபோது கப்பலில் 30 முதல் 50 கிலோ எடையுள்ள ஹெராயின் என்ற போதைப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த போதைப் பொருளுடன் ஈரான் நாட்டு கப்பலில் இருந்த 7 பேரையும் கைது செய்து அருகில் உள்ள குஜராத் மாநில காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.

கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைபொருள் அளவை துல்லியமாக மதிப்பிட்டால்தான் அதன் சர்வதேச சந்தை மதிப்பை கணக்கிட வாய்ப்பு உள்ளது என்று குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை டிஐஜி ஹிமன்சு  சுக்லா தெரிவித்தார்.


No comments

Thank you for your comments