Breaking News

தள்ளுவண்டி டிபன் கடையை அடித்து நொறுக்கிய சமூகவிரோதிகள்

விருத்தாசலம்:

தள்ளுவண்டி டிபன் கடையை அடித்து நொறுக்கிய சமூகவிரோதிகள் விருத்தாசலத்தில் பரபரப்பு  ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா ஆபீஸ் அருகில் ரோட்டோரம் தள்ளுவண்டியில் காலை டிபன் கடை நடத்தி வரும் பழனியம்மாள் இவர் கணவனை இழந்து பிழைப்புக்காக டிபன் கடை நடத்தி வருகிறார்.

இன்று காலை திடீர் என்று சமூகவிரோதிகள் பழனியம்மாளின் ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடையை அடித்து நொறுக்கினார்கள். அதோடு மட்டுமின்றி வியாபாரத்துக்காக வைத்திருந்த இட்லி மாவு, சாம்பார், சட்னி அனைத்தையும் கீழே ஊற்றினார்கள். மேலும்   வண்டியை  தலைகீழாக தள்ளி நாசம் செய்து உள்ளனர்.

இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் செய்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுபோன்று உணவகங்களில் விருத்தாசலத்தில் அவ்வப்போது சமூக விரோதிகள் தாக்கி வருவது வழக்கமாக உள்ளது.

No comments

Thank you for your comments