Breaking News

மெகா தடுப்பூசி முகாம் ஆட்சியர் ஆர்த்தி அழைப்பு விடுப்பு


காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா கொடும் நோயினை தடுப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் அனைத்து வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது. 


ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 தடுப்பூசி முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள். தகவல்களை பதிவிட தகவல் பதிப்பாளர்கள் (DEO) மற்றும் பயனாளிகளை அழைத்துவர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள் (ICDS), உள்ளாட்சி துறை (Local Bodies), வருவாய் துறையினை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்த உள்ளனர். 

இந்த கொரோனா தடுப்பூசியானது 100% பாதுகாப்பானது. ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 2வது தடுப்பூசி நிலுவையில் இருந்தால் அவர்களும் இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

முதல் தவணையினை போடாதவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தங்களும் தங்கள் குடும்பத்திலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடும்பமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஆயுதம் தடுப்பூசியே ஆகும். குறிப்பாக இரத்த அழுத்தம், சக்கரைநோய் உள்ளவர்களும் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அவசியமானது. 

இந்த மெகா மாபெரும் தடுப்பூசி முகாமில் சுமார் 60,000 தடுப்பூசி போட காஞ்சிபுரம் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இத்தடுப்பூசி முகாமினை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


No comments

Thank you for your comments