சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை ஆடைக்குள் மறைத்து திருடும் இளம் பெண்ணிற்கு போலீஸ் வலைவீச்சு
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் அமைந்திருக்கும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் இளம்பெண் ஒருவர் பொருட்கள் வாங்குவது போல் வந்துள்ளார். வெகுநேரமாக பொருட்களை வாங்குவது போல் அங்கு இங்கேயும் அலைபாய்ந்து கொண்டிருந்தார். அப்போது அதை கடையின் உள் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் பொருட்களை திருடி, தனது ஆடைக்குள் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார்.
அந்தப் பெண் பொருட்களை திருடிச் சென்ற பிறகு கடையில் பல பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி கேமராக்களை பரிசோதித்து பார்த்தபோது, அந்த பெண்கள் பொருட்களை எடுத்து ஆடைக்குள் மறைத்து வைக்கும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது.
இதுதொடர்பாக கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments