Breaking News

சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் 

வேப்பூர் பேருந்து நிலையத்தில்  சுற்றுச் சுவர் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிலையத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளில் இருந்து வேப்பூர் பஸ் நிலையம் வழியாகத்தான் பொது மக்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது வேப்பூர் பேருந்து நிலையம் புறக்கணிக்கப்பட்டு அமைக்கப்பட்டு அதனை சுற்றி தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் அரசு செய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் தடுப்பு சுவர் உள்ளேயே இருந்து வெளியில் வர முடியாமல்  அவதி படம் நிலை ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு வழி விட்டு மதில் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்காத அரசு சுற்றுசுவர் வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அய்யாக்கண்ணு மகன் சரவணன் தலைமையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வேப்பூர் பேருந்து நிலையம் சுற்றுசுவர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்து பின்பு சார் ஆட்சியர் அமித் குமார் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் அமித் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

No comments

Thank you for your comments