ஆக்கிரமிப்பை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி...
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த காஞ்சிராங்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள இடு மற்றும் ஏரி வாய்க்கால்களை ஒரு பகுதி இடத்தினை, தனிநபர்கள் சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இடுகாட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் மழைக்காலங்களில் பொழியும் மழை ஊருக்கும் புகும் அவலநிலையால் பலர் பாதிக்கப்படுள்ளனர்.
இந்நிலையில் இடுகாடு மற்றும் ஏரி வாய்க்கால் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி தர கோரி ஊராட்சி தலைவர் பணச்செல்வி பெரியசாமி வேப்பூர் தாசில்தாரிடம் மனு அளித்திருந்தார்.
அதன்படி வேப்பூர் நிளஅளவையர் சிவக்குமார் தலைமையில் இடுகாடு மற்றும் ஏரிவாய்க்கால் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை கண்டறிந்து அளந்துக் காட்டப்பட்டது. பின்பு ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கரைகள் அமைக்கப்பட்டது.
அப்போது, வி.ஏ.ஓ., ரங்கநாதன், துணைத் தலைவர் வேளாங்கண்ணி மணிகண்டன், ஊராட்சி செயலர் சிவா, கிராம உதவியாளர்கள் சாமிதுரை, சடையன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி மன்றதலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments