Breaking News

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை

தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வழங்கக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு 45 என்பதை நீக்கம் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் அரசு பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது வருத்தமளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்,

2021இல் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கோ. பாலகுமாரன் , மாநில அமைப்பாளர் ஜெ. நாராயணசாமி, மாநில மகளிர் அணி தலைவர் செல்வி ராஜேஸ்வரி, மாநில மகளிர் அணி செயலாளர்கள் புவனேஸ்வரி, தனலட்சுமி, கலைவாணி, பிருந்தாதேவி,கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் விவேக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்து காமாட்சி, கலைவாணன், தங்கமணி, தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தில்லைமுத்து, குட்டி ராஜ், மாநில தகவல் தொடர்பு துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராம்குமார், மற்றும் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments